உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி: நாமக்கல்லில் விழிப்புணர்வு மினி மாரத்தான்


உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி:  நாமக்கல்லில் விழிப்புணர்வு மினி மாரத்தான்
x

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி: நாமக்கல்லில் விழிப்புணர்வு மினி மாரத்தான்

நாமக்கல்

தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் எம்.பி.க்கள் ராஜேஸ்குமார், சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் முன்னிலையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளால் அலங்கரிக்கப்பட்ட பஸ்களையும், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தையும் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் தன் புகைப்படம் (செல்பி) எடுப்பதற்கான அமைப்பில் நின்று தன்புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுத்து கொண்டார்கள்.


Next Story