செங்குந்தபுரத்தில் மாரியம்மன் வீதியுலா
செங்குந்தபுரத்தில் மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தார். இதில் செங்குந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) பல்லாக்கும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்தபுரம் உறவுமுறை பஞ்சாயத்தினர், ஊர் நாட்டாண்மைகள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story