சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

தர்மபுரி குள்ளனூரில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

தர்மபுரி

தர்மபுரி அருகே குள்ளனூரில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த விழாவையொட்டி நேற்று காலை தீர்த்தக்குடம், முளைபாரிகை மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய விதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Next Story