கீழையூர்மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கீழையூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிங்கம், நாகம், பூதம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வகானங்களிலும், அம்மன் வீதி உலா, நடந்தது மேலும் முத்துப்பல்லாக்கிலும் அம்மன் தினமும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம்
விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார்.
அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், கோவில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.