மாரியம்மன் கோவில் கொடை விழா


மாரியம்மன் கோவில் கொடை விழா
x

மாரியம்மன் கோவில் கொடை விழா நடக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் குன்னத்தூர் மாரியம்மன்- முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) குடியழைப்பு நிகழ்ச்சி, கும்பம் ஏற்றுதல், மாக்காப்பு அலங்காரம், வில்லிசை நிகழ்ச்சி, சாஸ்தா பிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு பால்குடம் எடுத்து வீதிஉலா, 10 மணிக்கு மகா அபிஷேகம் அலங்காரத்தை தொடர்ந்து 12 மணிக்கு மதியக் கொடை நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பூகிரகம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், 6 மணிக்கு கோவில் முன்பு பொங்கலிடுதல் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story