அவதானப்பட்டிமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா
கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடிமாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 170-வது ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-வது நாளான நேற்று காலை அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்தூர், பெரியமுத்தூர், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் மற்றும் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி மற்றும் பொன்கரகமும், நடைபெற்றன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து கோவில் பின்புறம் 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.