கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா


கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
x

ஓசூர் சின்ன எலசகிரியில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே சின்னஎலசகிரி கிராமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. நேற்று ஓசூர் தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சின்ன எலசகிரியில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு கோட்டை மாரியம்மன், முத்து மாரியம்மன், ஓம் சக்தி அம்மன், முனீஸ்வரர் உள்ளிட்ட 15 கிராம தேவதைகளுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் அலகு குத்திக்கொண்டு, அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ஆராதனைகளுடன் அம்மனை மீண்டும் தாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story