மாரியம்மன் கோவில் வெள்ளி தேரோட்டம்


மாரியம்மன் கோவில் வெள்ளி தேரோட்டம்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வெள்ளி தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வெள்ளி தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.

மாரியம்மன் கோவில்

பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. பின்னர் பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவார்கள். கடந்த 1-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது. மேலும் கோவில் கொட்டு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவம்

இதை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆயக்கால் போடுதல், இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மேல் மகுடம் வைத்தல் ஆகியவை நடக்கிறது. நாளை (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், அதை தொடர்ந்து 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் வெள்ளித்தேர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது.

பாரிவேட்டை

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு வெங்கட்ரமணன் வீதியில் இருந்து 2-ம் நாள் தேர் புறப்பட்டு, சத்திரம் வீதியில் கொண்டு நிறுத்தப்படுகிறது.

வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு அங்கிருந்து 3-ம் நாள் தேர் புறப்பட்டு, தேர்நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகம் நடடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி வெள்ளித்தேர் மற்றும் விநாயகர் தேரை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story