தர்மபுரி உழவர் சந்தையில்முள்ளங்கி விலை தொடர் வீழ்ச்சிஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை


தர்மபுரி உழவர் சந்தையில்முள்ளங்கி விலை தொடர் வீழ்ச்சிஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை
x
தினத்தந்தி 31 July 2023 12:30 AM IST (Updated: 31 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி உழவர் சந்தையில் முள்ளங்கி விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது.

முள்ளங்கி சாகுபடி

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி, கம்பைநல்லூர், காரிமங்கலம், அதகபாடி, தொப்பூர், பி.அக்ரஹாரம், பென்னாகரம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளங்கி விலை ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையானது. தர்மபுரி உழவர் சந்தை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு முள்ளங்கி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது.

விலை தொடர் வீழ்ச்சி

இந்த நிலையில் தர்மபுரி உழவர் சந்தைக்கு தொடர்ந்து முள்ளங்கி வரத்து அதிகரித்ததால் விலையும் தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக முள்ளங்கி விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளிலும் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து வாடகைக்கு கூட கட்டுப்படியாக முடியாத நிலையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் முள்ளங்கியை உழவர் சந்தைகளுக்கு கொண்டுவர வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

1 More update

Next Story