நாமக்கல் உழவர் சந்தையில் அதிகாரி திடீர் ஆய்வு


நாமக்கல் உழவர் சந்தையில் அதிகாரி திடீர் ஆய்வு
x

நாமக்கல் உழவர் சந்தையில் அதிகாரி திடீர் ஆய்வு

நாமக்கல்

நாமக்கல் உழவர் சந்தைக்கு தினசரி சராசரியாக 25 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்காக விவசாயிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் 160 முதல் 170 விவசாயிகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர் பயன்பெறுகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் நாமக்கல் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை ஆய்வு செய்த இயக்குனர், விற்பனை கூடத்துக்கு சொந்த இடம் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், வேளாண் அலுவலர் கலைச்செல்வி, உதவி வேளாண் அலுவலர் சேகர் உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story