பொங்கல் பண்டிகையை முன்னிட்டுஓசூர் உழவர் சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டுஓசூர் உழவர் சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

உழவர் சந்தை

ஓசூர் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஓசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காய்கறி, பழங்களை வாங்கி செல்வார்கள். வார இறுதிநாட்களில் இங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஏராளமான விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர்.

70 டன் காய்கறிகள்

அதன்படி நேற்று ஓசூர் உழவர் சந்தையில் 70 டன் காய்கறிகள் விற்பனை ஆனது. இவற்றின் மதிப்பு ரூ.32 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 50 டன் காய்கறிகள் விற்பனை ஆனது. உழவர் சந்தையில் 230 விவசாயிகள் கடைகள் அமைத்திருந்தனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர்.

காய்கறிகளின் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கியதை காணமுடிந்தது. காய்கறிகளை தவிர பண்டிகைக்கு தேவையான மஞ்சள், கரும்பு சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மொச்சை, கடலைக்காய் ஆகியவையும் அதிகளவில் விற்பனை ஆனது.

பூக்கள் விலை உயர்வு

இதேபோல் பூக்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. சாமந்தி கிலோ ரூ.150, மல்லிகை ஒரு கிலோ ரூ.2 ஆயிரம், பட்டன் ரோஸ் கிலோ ரூ.250 என வழக்கத்தை விடவும் உயர்ந்ததால், பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பண்டிகையையொட்டி பூஜைப்பொருட்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது


Next Story