சிறுமிக்கு திருமணம்; தாய் கைது


சிறுமிக்கு திருமணம்; தாய் கைது
x

16 வயது சிறுமிக்கு திருமணம் செய்த தாயாரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35), இவர் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் டைலராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் சக்திவேலுக்கும், வேப்பந்தட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் தாயார் குழந்தை திருமணம் நடத்தி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியை திருமணம் செய்த சக்திவேலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story