சிறுமிக்கு திருமணம்; உடந்தையாக இருந்தவர் கைது
சிறுமிக்கு திருமணம் செய்ய உடந்தையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு கட்டாய திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்பு பெற்றோர் முன்னிலையில் கட்டாயப்படுத்தி புளியங்குழி கிராமத்தை சேர்ந்த அன்பரசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. மேலும் சிறுமிக்கு திருமணம் செய்ய உடந்தையாக இருந்ததாக திருமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story