மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா


மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா
x

மார்ஷல் நேசமணி பிறந்தநாளையொட்டி, நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மார்ஷல் நேசமணி பிறந்தநாளையொட்டி, நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

பிறந்த நாள் விழா

குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்க போராடியவர்களின் முக்கிய பங்கு வகித்தவர் மார்ஷல் நேசமணி. இவர் குமரி தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். இவரது பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று நாகர்கோவில் வேப்பமூடு மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாநகர துணை மேயர் மேரி பிரின்சி லதா, மார்ஷல் நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்பலோஸ், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசிலியான், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.- காங்கிரஸ்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் முன்பு உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் வேல்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர தலைவர் நவீன்குமார் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி செயலாளர் ராமசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சமத்துவ மக்கள் கட்சி

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் மாலை அணித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில நிர்வாகிகள் குரூஸ் திவாகர், அவைத்தலைவர் புளியடி பால்ராஜ், பொருளாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story