மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் காரைக்குடி தாலுகா குழு கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் காரைக்குடி தாலுகா குழு கூட்டம் தாலுகா குழு உறுப்பினர் வெங்கட் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், மோகன், தாலுகா குழு செயலாளர் அழகர்சாமி ஆகியோர் பங்கேற்றனர். காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ெரயில் அகல ெரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அப்பணிகள் நிறைவுற்று 3 ஆண்டுகளாகியும் கம்பன் எக்ஸ்பிரஸ் ெரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் மீண்டும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க தெற்கு ெரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும்.
காரைக்குடிபுதிய ெரயில் நிலையம் திறந்து 10 ஆண்டுகளாகியும் பயணியர் நடை மேம்பாலம் தேவையான இடத்தில் அமைக்கப்படவில்லை. பயணிகள் நலன் கருதி புதிய ெரயில் நிலையத்தின் மையப்பகுதியில் உடனடியாக நடை மேம்பாலம் அமைத்திட ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






