மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், கரூர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story