மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரெயில்வே துறையை சேர்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் பிரகலநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் திருவண்ணாமலை வழியாக செல்லும் ஹவுரா ரெயிலை திருவண்ணாமலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை- திண்டிவனம் ரெயில் பாதை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்.

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் மூடப்பட்டு உள்ள லக்கேஜ் சென்டர், பயணிகள் தங்கும் அறையை திறக்க வேண்டும்.

திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் திருவண்ணாமலை ரெயில் நிலையம் பெயருடன் நுழைவுவாயில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் தமிழ்செல்வி, செல்வி, ராமதாஸ், இலியாஸ்சர்கார், பழனி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story