மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான சுர்ஜித்பவன் அரங்கிற்குள் நடந்த கூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்று போலீசார் அத்துமீறி அரங்கிற்குள் நுழைந்து அராஜகம் செய்ததை கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story