மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கரியாப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் பெருந்தொகை பாக்கித்தர வேண்டும். விவசாயிகள் பெயரில் ரூ.131 கோடி வங்கிக்கடனை விவசாயிகளுக்கே தெரியாமல் வாங்கி அதனை திரும்ப செலுத்தாமல் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த மோசடியான கடனை ஆலை நிர்வாகத்திடமே வசூல் செய்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இதை ஆதரித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராசன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட குழு சார்பில் கரியாப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் உள்ளிட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story