மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயலாளர்கள் ஜெய்சங்கர், சிவகுமார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் பழனி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.மூங்கில்துறைபட்டில் கடந்த 18-ந்தேதி வன்முறையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணமும், பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பழனி, சசிகுமார், செந்தில், ஏழுமலை, ஒன்றிய நிர்வாகிகள் பச்சையப்பன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story