பொட்டல்புதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பொட்டல்புதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தென்காசி

கடையம்:

பொட்டல்புதூர் மேல பஸ்நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொட்டல்புதூர் கிளை செயலாளர் நாகூர் மீரான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி, மாவட்டக்குழு உறுப்பினர் பாரதி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.


Next Story