மரியம் பெண்கள் கலை- அறிவியல் கல்லூரி சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்


மரியம் பெண்கள் கலை- அறிவியல் கல்லூரி  சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
x

வள்ளியூரில் மரியம் பெண்கள் கலை- அறிவியல் கல்லூரி சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் தாமஸ், தொம்மையம்மாள் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை மற்றும் டி.டி.என். கல்வி குழுமத்தின் சார்பில் வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின்ரோட்டில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் அடிகளார் ஆசி வழங்கினார்.

புதிய கல்லூரியை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், "ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்தது. குறிப்பிட்ட சமூகத்தினர்தான் கல்வி பயில முடியும் என்ற நிலைமையை மாற்றி எல்லோரும் கல்வி கற்கலாம் என்று சொன்னவர் மெக்கேலா பிரபு என்பவர்தான். அதன்பின்பு தொடர்ச்சியாக வந்த கிறிஸ்தவ அமைப்புகள் பல்வேறு இடங்களில் கல்வி கூடங்களை ஆரம்பித்து அனைவருக்கும் கல்வி கற்கவேண்டும் என்ற ஆர்வத்தை கொண்டு வந்தார்கள். பெண்கள் கல்வி கற்றால்தான் குடும்பம் முன்னேறும் என்பதனை கருத்தில் கொண்டு மறைந்த தலைவர் கருணாநிதி திருமண உதவி திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கி வந்தார். இதனை தொடர்ந்து தற்போதைய முதல்-அமைச்சர் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். பெண்கள் கல்விக்கு தமிழக அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றி வருகிறது" என்றார்.

நிகழ்ச்சியில் ஹெலன் லாரன்ஸ் தம்பதியினரின் மகள் ஒலிவா குத்துவிளக்கேற்றினார். புதிய நுலகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் திறந்து வைத்தார். கல்லூரி தலைவர் அறையை வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் செல்வராஜாவும், முதல்வர் அறையை வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணனும், வகுப்பறை கட்டிடங்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளையும் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் சென்னை டைனமிக் இயக்குனர் வெல்லிங்டன், சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், வள்ளியூர் நேரு நர்ஸிங் கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம், வார்டு கவுன்சிலர் உஷா, மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் மற்றும் அரசியல் கட்சியினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி பொருளாளர் ஸ்டேன்லி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வள்ளியூர் தாமஸ் தொம்மையம்மாள் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை, வள்ளியூர் டி.டி.என்.குழுமத்தினர் செய்திருந்தனர்.


Next Story