மாசிமகத்திருவிழா: தஞ்சை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை


மாசிமகத்திருவிழா: தஞ்சை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 24 Feb 2024 6:49 AM IST (Updated: 24 Feb 2024 7:06 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு கொண்டாடப்பட உள்ள மாசிமகத் திருவிழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story