மதுரை ஐகோர்ட்டில் மாஸ்க் கட்டாயம்...!


மதுரை ஐகோர்ட்டில்  மாஸ்க் கட்டாயம்...!
x

மதுரை ஐகோர்ட்டில் வரும் 20-ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் என நிர்வாகம் நீதிபதி பி.என். பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும்போது திபதி பி.என். பிரகாஷ் இந்த கருத்தை தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது ஏற்கனவே 3 கொரோனா அலைகளை தாண்டிவிட்டோம், தப்பிவிட்டோம் நாம் இப்போ உயிரோடு பயணித்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இன்னும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஆகவே பாதுகாப்பு கருதி 20-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்குக்காக வரும் அனைவருமே மதுரை ஐகோர்ட்டில் உள்ளே வரும் அனைவருமே முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.

அதுபோக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்க்கு சம்மந்தப்பட்டவர் மட்டுமே உள்ளே வரவேண்டும் என்று கூறினார். வழக்கிற்க்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உள்ளே வருவதை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மதுரை ஐகோர்ட்டில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story