கண்மாயில் மூழ்கி கொத்தனார் பலி


கண்மாயில் மூழ்கி கொத்தனார் பலி
x

கண்மாயில் மூழ்கி கொத்தனார் பலியானார்.

மதுரை

வாடிப்பட்டி

அலங்காநல்லூர் அருகே எரம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 30). கொத்தனார். இவரும் சிறுவாலையை சேர்ந்த மோகன்ராஜ்(32), மாயகிருஷ்ணன்(35) ஆகியோர் சமயநல்லூர் அருகே கண்மாயில் குளித்துவிட்டு மீன் பிடிப்பதற்காக வலைகட்டினர். பின் அப்படியே அங்கேயே தூங்கி விட்டனர். இரவில் ராஜ்குமார் மீன்வலைகளை எடுப்பதற்காக கண்மாய்க்குள் இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேரில் சிக்கி கண்மாயில் மூழ்கி இறந்தார். மறுநாள் மோகன்ராஜ், மாயகிருஷ்ணன் இருவரும் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த ராஜ்குமாரை காணாமல் தேடினர். அப்போது அவர் கண்மாயில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story