மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி


மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
x

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

சேலம்

தாரமங்கலம்:

சேலம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பூபாலன் (வயது 27), கொத்தனார். இவர், அழகுசமுத்திரத்தை சேர்ந்த பாபு என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார ஒயரில் அவரது கை பட்டதாக தெரிகிறது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து பூபாலன் கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பூபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பூபாலனின் தாய் கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story