தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் 1-வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 41), கொத்தனார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுடைய கோவிந்தராஜ் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவரது மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மகன்களுடன் கோவையில் உள்ள சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த கோவிந்தராஜ் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலியுடன் தூங்கினார். நேற்று காலை கோவிந்தராஜை வேலைக்கு அழைத்து செல்ல சரவணன் என்பவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கோவிந்தராஜ் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கோவிந்தராஜூன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.