கருட மலையில் அரங்கநாதருக்கு மாசிமக தீர்த்தவாரி


கருட மலையில் அரங்கநாதருக்கு மாசிமக தீர்த்தவாரி
x
தினத்தந்தி 7 March 2023 12:15 AM IST (Updated: 7 March 2023 12:25 AM IST)
t-max-icont-min-icon

மையனுர் கருட மலையில் அரங்கநாதருக்கு மாசிமக தீர்த்தவாரி நடந்தது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே மையனூர் கருடமலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மகத்தன்று திருவரங்கம் அரங்கநாதர் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கருடமலை கோவிலில் மாசி மக உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து உற்சவரை பக்தர்கள் .ஊர்வலமாக மணியந்தல், சீர்ப்பனந்தல், கரையாம்பாளையம், எடுத்தனூர், ஓடியந்தல், ஏந்தல், பெரியபகண்டை வழியாக 23 கி.மீட்டர் தொலைவில் உள்ள மையனூர் கருடமலைக்கு எடுத்து வந்தனர்.

சாமி வீதிஉலா

இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு கருடமலை கோவிலில் திருவரங்கம் அரங்கநாதருக்கு தீர்த்தவாரியும், திருமஞ்சன ஆராதனையும் நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகி சாமிசுப்ரமணியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சாமி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு உற்சவர் அரங்கநாதர் பெருமாள் மீண்டும் திருவரங்கத்துக்கு புறப்பட்டு சென்றார்.

1 More update

Next Story