ஏரியில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற மேஸ்திரி சாவு
ஏரியில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே புன்னப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 33), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகன்யா. இவர்களது மகன் விஷ்ணுபிரியன் (9).
இந்த நிலையில் நேற்று காலை ரஞ்சித்குமார் புன்னப்பாடி ஏரியில் மீன் பிடிக்க மகனுடன் சென்றார். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுப்பிரியன் கால் தவறி ஏரியில் விழுந்தார். இதை பார்த்த ரஞ்சித்குமார் மகனை காப்பாற்ற ஏரியில் குதித்தார். இதில் ரஞ்சித்குமார் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த விஷ்ணுபிரியனை காப்பாற்றினர்.
மேலும் இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.