மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

காட்டுமன்னார்கோவிலில் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது எம்.பி. பதவியை பறித்து கைது செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் ஜாக்கிர் உசேன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட செயலாளர் மணிகண்டன், விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், வட்ட நிர்வாகிகள் சுசிகலா, சுமதி, ஜெயந்தி, புகழேந்தி, சிங்காரவேலு, நீலமேகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story