பிரசவத்தில் தாய்-குழந்தை சாவு


பிரசவத்தில் தாய்-குழந்தை சாவு
x

முசிறி அருகே பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.

திருச்சி

முசிறி அருகே பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.

2-வது முறையாக கர்ப்பம்

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தும்பலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 32). இவரது மனைவி ஆர்த்தி (28). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான ஆர்த்தி பிரசவத்திற்காக சோளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று காலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து சில மணி நேரத்தில் குழந்தை இறந்தது. இதனிடையே திடீரென ஆர்த்திக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

சாவு

இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, செல்லும் வழியில் ஆர்த்தியும் பரிதாபமாக இறந்தார். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய், குழந்தை இறந்ததால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இந்த சம்பவம் குறித்து ஆர்த்தியின் தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story