பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் 5,971 ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

2,448 சுகாதார பணியாளர்களுக்கும் 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்படும். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4,848 செவிலியர்களுக்கு ரூபாய் 18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்படும்.

ஹெல்த்கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story