மோகனூரில் அதிகபட்சமாக36 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக மோகனூர் பகுதியில் 36 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
மோகனூர்-36, மங்களபுரம்-19, குமாரபாளையம்-16, பரமத்திவேலூர்-12, கொல்லிமலை-11, எருமப்பட்டி-3, நாமக்கல்-2, ராசிபுரம்-2, சேந்தமங்கலம்-1, புதுச்சத்திரம்-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 103 மி.மீட்டர் ஆகும். நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. பிற்பகல் 3.30 மணிக்கு லேசான சாரல்மழை பெய்தது.
Related Tags :
Next Story