மே தின 100-வது ஆண்டு விழா


மே தின 100-வது ஆண்டு விழா
x

மே தின 100-வது ஆண்டு விழா நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 100-வது ஆண்டு மே தின விழாவை ஒட்டி அழகாபுரி விலக்கு அருகே மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் கட்சி கொடி ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேசியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமசாமி, மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருதுநகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி காதர் முகைதீன் தலைமையில் இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் மாரீஸ்வரி கட்சி கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் முத்துக்குமார், சக்கணன், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல வெம்பக்கோட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் நடராசன் தலைமையில், கீழாண்மறைநாடு, வலையபட்டி, கண்மாய்பட்டி, டி.மேட்டூர், கீழராஜகுலராமன் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story