மே தின கிராம சபை கூட்டம்
கடையம் அருகே கோவிந்தபேரியில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்தபேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம், தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் ருக்மணி, யூனியன் ஆணையாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை முருகன், மற்றும் பலர கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் துணைத் தலைவர் இசேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சங்கரவேல், கிராம உதவியாளர் சக்தி, வேளாண் அலுவலர் ஜெகன் மற்றும் ஊராட்சி செயலாளர் மூக்காண்டி, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி மாணிக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் 5 தென்னங்கன்று நடுதல், வறுமை ஒழிப்புச் சங்கம் மூலம் 4 நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story