சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பலவண்ண, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை அமைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதலே தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர்.

இந்த நிலையில் சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்!" என்று கூறியுள்ளார்.


1 More update

Next Story