தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயம்


தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயம்
x

தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயமானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தத்தனூர் காலனி தெருவை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 49), விவசாயி. இவரது மகள் துர்காதேவி (22). இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தேர்வு எழுத சென்றவர் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. இந்த சம்பவம் குறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story