ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
எஸ்.புதூர்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி எஸ்.புதூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் கரிசல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத்தலைவர் சந்திரன், சிவகங்கை நகர செயலாளர் தீபன் சக்ரவர்த்தி, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் லோகநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சேதுராமன், காந்திமதி, விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் கரிசல் உசேன், அடைக்கன், நிர்வாகிகள் முத்துச்சாமி, சேது தியாகராஜன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.