கலை போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பதக்கம்


கலை போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பதக்கம்
x

கலை போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் பதக்கம் வென்றனர்.

திருச்சி

அகில இந்திய பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பு மன்றம் தென்மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கலைப் போட்டி ஆந்திர மாநிலம், திருப்பதி, பத்மாவதி பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 20 மாணவர்கள் குழுவினர் கலந்து கொண்டனர். இந்த குழுவினர் கலை பண்பாட்டு பேரணி மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகிய 2 போட்டிகளில் 2-ம் இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழோடு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம், தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாச ராகவன், தொலைக்கல்வி இயக்குனர் பேராசிரியர் பழனிச்சாமி ஆகியோரை நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Next Story