மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - சேலம் மாணவி முதலிடம்


மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - சேலம் மாணவி முதலிடம்
x
தினத்தந்தி 16 July 2023 10:42 AM IST (Updated: 16 July 2023 11:34 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ/ மாணவியர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீடு, 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காகன அகில இந்திய கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், 200 பிடிஎஸ் இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன.


அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் டாப் 10 இடம் பிடித்த மாணவர்கள்:-


1] சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள்

(அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேலம்)

2] தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்கள்

(அரசு மேல்நிலைப்பள்ளி மங்கரை, தருமபுரி)

3] காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் முருகன் 560 மதிப்பெண்கள்

(அரசு ஆதி திராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி மௌல்வாக்கம்)

4 ]திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரோஜ 544 மதிப்பெண்கள்

(சண்முகா இன்டஸ்ரிஸ் அரசு மேல்நிலைப்பள்ளி திருவண்ணாமலை)

5]சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி அன்னபூரணி 538 மதிப்பெண்கள்

(அரசு மேல்நிலைப்பள்ளி உலகம்பட்டி)

6] சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 537 மதிப்பெண்கள்

(அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேலம்)

7]அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அன்னபூரணி 533 மதிப்பெண்கள்

(அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடையார்பாளையம்)

8]பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் புகழேந்தி 531 மதிப்பெண்கள்

(அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்)

9]தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் கணேஷ் 530 மதிப்பெண்கள்

(வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்)

10] திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சாம் 523 மதிப்பெண்கள்

(அரசு மேல்நிலைப்பள்ளி காசிநாயக்கன்பட்டி திருப்பத்தூர்)


அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் டாப் 10 இடங்கள் பிடித்துள்ள மாணவர்கள் விவரம்:-







Next Story