வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x

நெல்லை தச்சநல்லூரில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூரில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் பொது மருத்துவம், காசநோய், பல் மருத்துவம், பிசியோதெரபி, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண், குழந்தைகள் நலம், மகளிர் நலம், உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி, நிலவேம்பு குடிநீர், உப்பு கரைசல் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை தேவையானோருக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டவரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்னர்.


Next Story