மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

செங்கல்நத்தம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வடடார மருத்துவ அலுவலர் கோபிநாத், ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், பரிசு பெட்டகம் வழங்கினார்.

முகாமில் ரத்த அழுத்தம், சக்கரை நோய் கண்டறிதல், காய்ச்சல், ரத்த பரிசோதனை, தோல் சம்மந்தமான நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஸ்வநாதன், சுகாதார ஆய்வாளர் சவுந்தரபாண்டியன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் சம்பத், மருத்துவர்கள் மோகனவேல், யாமினி, அருள் பாண்டியன், செல்வத்தரசி, பாண்டியன், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்.


Next Story