கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்


கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
x

தாராபுரம் அருகே கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

திருப்பூர்

தாராபுரம் அருகே கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

தாராபுரம் அருகே பொன்னாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் செல்லாம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சின்னக்காம் பாளையம் பேரூராட்சி செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். முகாமை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி தொடங்கி வைத்து 10 கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10 நபர்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

பிறகு அமைச்சர் கயல்விழி பேசியதாவது:-

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் அனைத்து மருத்துவர்கள் மக்களைத் தேடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களுக்கு நோய்கள் குறித்து பரிசோதனை செய்து அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளிக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த கொதிப்பு, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆகியவற்றை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஸ்கேன், இ.சி.ஜி. எடுக்கப்பட்டு உடல் நலம் குறித்து தெரிவிக்கப்படும்.

அதே போன்று கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் சரியான காய்கறிகளை உட்கொண்டு முறையான காலத்தில் டாக்டர்கள் அறிவுரையின் பேரில் பரிசோதனை செய்து கொண்டு குழந்தைகளை நல்ல முறையாக பெற்று எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருந்து மாத்திரைகள்

முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண் காட்சி மற்றும் ஊட்டசத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். அரசு வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில்

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 250 பெண்கள் உள்பட 600 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்யப்பட்டது.அ

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் கன்னீஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story