மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
x

நாமகிரிப்பேட்டை வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

நாமகிரிப்பேட்டை வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள உடையார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை வட்டார கல்வி அலுவலர் பழனியம்மாள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்செல்வம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சென்றாய பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், ஆசிரியர் பயிற்றுனர் முருகேசன், சிறப்பு பயிற்றுனர்கள் அருள்ராஜா, சரவணன், சுஸ்மிதா, இயன்முறை பயிற்சியாளர், ஆயத்த மையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத்திறன் அலுவலர் மகிழ்நன் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

முகாமில் ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 81 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதில் 8 பேருக்கு புதிதாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 10 மாணவர்களின் தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 4 மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். 18 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. அறிவு சிகிச்சைக்கு 3 மாணவர்கள் மருத்துவ குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டனர். இந்த முகாமினை உதவித்திட்ட அலுவலர் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story