மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

அம்பையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நகராட்சி மற்றும் வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து உலக அயோடின் தினத்தை முன்னிட்டு அம்பை கோவில்குளத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமை நடத்தின. அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரியப்பன், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சிதம்பர ராமலிங்கம், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நல கல்வியாளார் மாரிமுத்துசாமி வரவேற்றார்.

வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விக்னேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். மேலும் காசநோய் கண்டறியும் வாகனம் மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் அனுசியா மாரியப்பன், ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story