வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x

மோகனூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் பேரூராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் மருத்துவ முகாம் மோகனூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மோகனூர் வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வராஜா வரவேற்றார். மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வசித்தனர். இதில் ரத்தம், சிறுநீர், இ.சி.ஜி. தோல் பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனையும், பொதுமக்களுக்கு தோல் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவமனை, மோகனூர் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் மோகனூர் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். மோகனூர் அரிமா சங்க நிர்வாகிகள், பழனியாண்டி, பிரபாகரன், சரவணன், பிரதீஸ், ராஜா, சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார நர்சுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மோகனூர் சுகாதார ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.


Next Story