வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
x

மோகனூரில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் ஒன்றியம் ஒருவந்தூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம், திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஒருவந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை ஒருவந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஒருவந்தூர் கூட்டுறவு நீரேற்று பாசன சங்க தலைவர், செல்ல ராசாமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் முருகைய்யா வரவேற்றார். மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமையில், அரசு மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம், கண் மருத்துவம், டெங்கு நோய் சிகிச்சை, காசநோய் மருத்துவம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வராஜா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இலக்கியா, ஊராட்சி செயலாளர் அசோகன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.


Next Story