தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது
மானாமதுரை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முத்துனேந்தல் நடமாடும் மருத்துவமனை சார்பாக மருத்துவ குழுவினர் மற்றும் மருத்துவர் கணேஷ்பாண்டியன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். முன்னதாக மருத்துவ முகாமை நகராட்சி சேர்மன் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார்.
முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மற்றும் எச்.ஐ.வி. பரிசோதனை உள்பட அனைத்தும் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர்.
இதில், நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம், கவுன்சிலர் வேல்முருகன், துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம், லேப் டெக்னீசியன் அன்னகிளி, மானாமதுரை அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன் முத்துமீனா, ஆலோசகர் ஆனந்தம் மற்றும் நடமாடும் நம்பிக்கை மையம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, சுகாதார ஆய்வாளர் ராமநாதன் மற்றும் குருபிரகாஷ் மற்றும் மக்களை தேடி மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.