கோத்தகிரியில் மருத்துவ முகாம்


கோத்தகிரியில் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 1 July 2023 3:30 AM IST (Updated: 1 July 2023 3:31 AM IST)
t-max-icont-min-icon

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கோத்தகிரியில் மருத்துவ முகாம் நடந்தது.

நீலகிரி


கோத்தகிரி


கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. சுகாதாரத்துறை இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் பொதுமக்களுக்கு ரத்தம், சளி, கண், சிறுநீர், பரிசோதனை, சித்த மருத்துவம், இ.சி.ஜி., ஸ்கேன், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பாப்ஸ்மியர் பரிசோதனை உள்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் குழந்தைகள் நல மருத்துவர், பல் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், கண் மருத்துவர், எலும்பு சிகிச்சை நிபுணர் பங்கேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.



Next Story