நஞ்சப்பசத்திரத்தில் மருத்துவ முகாம்


நஞ்சப்பசத்திரத்தில் மருத்துவ முகாம்
x

வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் மருத்துவ முகாம் நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அப்போது மீட்பு பணியில் நஞ்சப்பச்சத்திர கிராம மக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டனர். இதனை தொடர்ந்து கிராம மக்களின் சேவையை பாராட்டும் விதமாக தென்பிராந்திய ராணுவம் மூலம் நஞ்சப்பசத்திரம் கிராமம் தத்து எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் எம்.ஆர்.சி., வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்தி மருத்துவ அதிகாரி, செவிலியர் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நஞ்சப்பசத்திர கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ராணுவ ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் கிராம குழந்தைகளுக்கு கதை சொல்லும் போட்டி நடத்தப்பட்டது. பின்னர் கிராம மக்களுக்கு எம்.ஆர்.சி. கமாண்டெண்ட் பிரிகேடியர் யாதவ் பரிசு வழங்கினார்.


Next Story